அந்த ட்யூனை விடக்கூடாதுன்னு உடனே போனில் ரெகார்ட் செய்தேன்...! - ஹிட் சாங் குறித்து ஜி.வி.பிரகாஷ் பகிர்வு - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி என 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.அவரின் கரியரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று மதராசப்பட்டினம்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம் பாடல் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது.இந்த பாடல் உருவான பின்னணியைப் பகிர்ந்த அவர், “ஒரு இசையமைப்பாளருக்கு எப்போது, எங்கே ஐடியா வரும் என்று சொல்ல முடியாது. இந்தப் பாடலின் மெலடி எனக்கு ஒரு சாதாரண பைக் பயணத்தின் போது திடீரென தோன்றியது.

நண்பர் ஓட்டிய பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டிருந்தபோது, ‘தான தோம் தன னா’ என்ற தாளம் மனதில் மின்னியது.அந்த நொடியை தவறவிடக் கூடாது என்று உடனே பைக்கை நிறுத்தச் சொல்லி, மொபைலில் அந்த ட்யூனை பதிவு செய்தேன்.

பின்னர் வீட்டிற்கு சென்று பியானோவில் அதை வடிவமைத்து, இயக்குநரிடம் கேட்டுக் காட்டினேன். ஆரம்பத்தில் ‘இதற்கான சூழல் படத்தில் இல்லை’ என அவர் கூறியபோதும், ‘இந்த மெலடியை தவறவிடக் கூடாது’ என வலியுறுத்தினேன்.

பின்னர் அந்த ட்யூனுக்கேற்ப காட்சியை உருவாக்கி, பாடலை படத்தில் இணைத்தனர். அதன் பிறகு அந்தப் பாடல் எனது வாழ்க்கையின் முக்கியமான ஹிட் பாடல்களில் ஒன்றாக மாறியது” என அவர் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

immediately recorded that tune on my phone so that I wouldnt miss it GV Prakash shares about hit song


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->