தென்னிந்திய போக்குவரத்தில் மாபெரும் மாற்றம்…! 2 புதிய புல்லட் ரெயில் பாதைகள்...! - தமிழக அரசின் அதிரடி திட்டம்
major change South Indian transportation 2 new bullet train routes Tamil Nadu government action plan
உலகின் முன்னேற்ற நாடுகளில் வேகத்தின் புதிய அடையாளமாக திகழும் புல்லட் ரெயில் திட்டம், தற்போது இந்தியாவிலும் வேகமெடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக மும்பை-ஆமதாபாத் இடையே அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 17 முக்கிய வழித்தடங்களில் புல்லட் ரெயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த பட்டியலில் சென்னை-ஐதராபாத், சென்னை-மைசூரு போன்ற முக்கிய பாதைகளும் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கூடுதல் முனைப்புடன் புதிய திட்டங்களை முன்வைத்துள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் இரு முக்கிய புல்லட் ரெயில் வழித்தடங்களை உருவாக்கும் திட்டம் தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது.முதல் வழித்தடமாக, சென்னை-திருச்சி-நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை இணைக்கும் அதிவேக பாதை முன்மொழியப்பட்டுள்ளது.
இரண்டாவது வழித்தடமாக, சென்னை-சேலம்-கோவை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வழித்தடங்களின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரிவான அறிக்கை தயாரிக்க, தமிழக அரசு ரெயில்வே வாரியத்திடம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், விஜயவாடா வரை உள்ள கிழக்கு கடற்கரை சரக்கு ரெயில் பாதையை, சென்னை-தூத்துக்குடி-கன்னியாகுமரி வரை நீட்டிக்க அனுமதி வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், தென்னிந்தியாவில் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
major change South Indian transportation 2 new bullet train routes Tamil Nadu government action plan