சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம்…! - எரிபொருள் நெருக்கடியில் ஓசூர் ஓட்டலின் வித்தியாசமான ஆஃபர் வைரல்...! - Seithipunal
Seithipunal


எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலை சமாளிக்க புதுமையான யோசனையுடன் ஓசூரில் உள்ள ஒரு உணவகம் வித்தியாசமான சலுகையை அறிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் போர் தாக்கத்தால் எரிபொருள் விநியோகம் சீர்குலைந்த நிலையில், குறிப்பாக வர்த்தக சிலிண்டர்களின் கிடைக்குமிடம் குறைந்துள்ளது. இதனால் பல ஓட்டல்களில் உணவு தயாரிப்பு அளவு குறைக்கப்பட்டதோடு, சில இடங்களில் விலை உயர்வும், சில இடங்களில் முழுமையான மூடலும் ஏற்பட்டுள்ளது.

சிலர் மாற்று வழியாக விறகு அடுப்பை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.இந்த சூழலில், ஓசூர் தளி சாலையில் செயல்படும் ஒரு உணவகம், வாடிக்கையாளர்களையும் தொழிலாளர்களையும் காக்கும் நோக்கில் ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“ஒரு வர்த்தக சிலிண்டர் வழங்கினால், ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம்; இரண்டு சிலிண்டர்கள் வழங்கினால், தினமும் இரண்டு பிரியாணி” என்ற இந்த சலுகை சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதுகுறித்து உணவக உரிமையாளர் தெரிவித்ததாவது, “எங்கள் உணவகத்தை நம்பி தினமும் 500 முதல் 1000 பேர் வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகு அடுப்பு பயன்படுத்தினாலும், விரைவான சமையலுக்கு சிலிண்டர் அவசியம்.

தொழிலாளர்கள் வேலை இழக்காமல், வாடிக்கையாளர்களுக்கு சேவை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த சலுகையை அறிவித்தோம்” என்றார்.

இந்த முயற்சிக்கு ஏற்கனவே சிலர் சிலிண்டர் வழங்கி பலனடைந்துள்ளதாகவும், வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரை இந்த சலுகை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புதுமையான யோசனை, நெருக்கடியான சூழ்நிலையிலும் வியாபாரத்தை தக்கவைத்து செல்லும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free biryani every day if you give cylinder unique offer from Hosur hotel goes viral amid fuel crisis


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->