மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருக்கலாம்... தவெக ஆட்சியின் உண்மையான லட்சணம் இது தானா? டிடிவி தினகரன் வினா! - Seithipunal
Seithipunal



அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அசோகத் தூண் அமைத்தல் மற்றும் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், பணிகளுக்கான டெண்டர் வழங்கும் செயல்முறையே இதுவரை நிறைவடையாத சூழலில், அந்தப் பணிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டன என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சுமார் ரூ.46 லட்சம் மதிப்பிலான இரண்டு பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்பாகவே அவை எவ்வாறு செயல்படுத்தப்பட்டன? முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுவதோடு, டெண்டர் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்பாகவே பணிகள் நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்டிருப்பது, வெளிப்படையான டெண்டர் நடைமுறைகளுக்கும் சட்ட விதிகளுக்கும் எதிரானது மட்டுமல்லாமல், மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையில் நிறைவடைந்த பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பதும், போலி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதும் தான் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கூறும் நேர்மையான, வெளிப்படைத்தன்மையான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகமா ? என்ற கேள்வியை பொதுமக்கள் ஒவ்வொருவரும் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

எனவே, டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்ட இந்தப் பணிகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அந்த விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ammk ttv dhinakaran condemn to tvk govt tambaram scam


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->