98-வது ஆஸ்கார் ரேஸ் தொடக்கம்… பரிந்துரை பட்டியல் வெளியாகி பரபரப்பு...!
98th Oscar race begins nomination list released creating buzz
2026-ம் ஆண்டுக்கான 98-வது அகாடமி விருதுகளின் பரிந்துரை பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி, உலக திரைப்பட ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகக் கருதப்பட்ட ‘சின்னர்ஸ்’ திரைப்படம், ஒரே ஆண்டில் 16 பிரிவுகளில் பரிந்துரைகள் பெற்று, ஆஸ்கார் வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்துள்ளது.

அதனை நெருங்கிய போட்டியாளராக ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ படம் 13 பிரிவுகளில் இடம் பிடித்து, விருதுப் போட்டியை மேலும் சூடுபடுத்தியுள்ளது.
சிறந்த நடிகர் பிரிவில் டிமோதி சாலமேட், லியோனார்டோ டி காப்ரியோ, எத்தன் ஹாக், மைக்கேல் பி. ஜோர்டான் என உலக சினிமாவின் நட்சத்திர வரிசை ஒரே மேடையில் மோதுகிறது.
இந்நிலையில், இந்தியா சார்பில் மிகுந்த நம்பிக்கையுடன் அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் பரிந்துரை பட்டியலில் இடம் பெறாதது, இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்கார் மேடையில் இந்த ஆண்டின் வெற்றிப் பயணம் யாருக்கு என்பதை உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்நோக்கி நிற்கிறது.
English Summary
98th Oscar race begins nomination list released creating buzz