மாணவர்கள் கவனத்திற்கு...! - நீட் தேர்வு விண்ணப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு...!
Attention Students Today final opportunity apply NEET exam
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தான் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 2026–27 கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் பிப்ரவரி 8-ந்தேதி முதல் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.
ஆரம்பத்தில் விண்ணப்பிக்க கடைசி நாளாக கடந்த 8-ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூடுதல் அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, விண்ணப்பிக்க மேலும் சில நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி இன்று (11-ந்தேதி) வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்குப் பிறகு மேலும் கால அவகாசம் வழங்கப்படாது என்று தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளது. இதனால், இன்னும் விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Attention Students Today final opportunity apply NEET exam