சொந்த ஊர் போறீங்களா...? நாளை முதல் தமிழகம் முழுவதும் 1,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...! - போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அவர்களின் பயணத்தை சிரமமின்றி மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மாநிலம் முழுவதும் ஏராளமான சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கான விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஜூலை 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 420 சிறப்புப் பேருந்துகளும், ஜூலை 11-ஆம் தேதி (சனிக்கிழமை) 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய வழித்தடங்களுக்கு ஜூலை 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்களிலும் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜூலை 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு தினமும் தலா 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி திரும்பும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ஜூலை 12-ஆம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 445 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ஏற்பாடுகள் மூலம் வார இறுதி பயண நெரிசலை குறைத்து, பயணிகள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் பயணம் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you going your hometown 1565 special buses operate across Tamil Nadu from tomorrow Transport Corporation announcement


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->