அம்மா உணவகங்கள் குறித்துப் பொய் பேசுவதா? முதலமைச்சர் விஜய்க்கு டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் - ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


அம்மா உணவகங்களின் அவலநிலையைச் சீரமைக்காமல், 630 அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாகப் பொய் பேசி வரும் முதலமைச்சர் விஜய்க்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் கருப்பு உடைப் போராட்டம்:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் இயங்கி வரும் அம்மா உணவக ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால், கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மிகக் குறைவான ஊதியம், அடிப்படை வசதிகளின்மை, சேதமடைந்த சமையல் உபகரணங்கள் மற்றும் தரமற்ற உணவு விநியோகம் எனப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே இன்றும் அம்மா உணவகங்கள் இயங்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சருக்குக் கேள்விகளும் விமர்சனமும்:

ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுப் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், தவெக ஆட்சிக்கு வந்தபின் 630 அம்மா உணவகங்களைச் சீரமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாக முதலமைச்சர் விஜய் கூறுவது ஏழை மக்களை வாக்கு அரசியலுக்காக ஏமாற்றும் செயல் என்று சாடியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பிறப்பித்த உத்தரவுகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து முதலமைச்சர் என்றாவது கள ஆய்வு செய்தாரா அல்லது அதிகாரிகளிடம் கேட்டறிந்தாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுகவின் கோரிக்கைகள்:

எனவே, அம்மா உணவக ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அங்கு உணவருந்த வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்குச் சுவையான, தரமான உணவு மற்றும் தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் உண்மையாகச் செய்து தர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK Leader TTV Dhinakaran Slams CM Vijay Over Claims on Amma Unavagam Demands Wage Hikes and Better Infrastructure


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->