கச்சா எண்ணெய் விலை உயர்வு தாக்கம்...! - இலங்கையில் பெட்ரோல்-டீசல் ராக்கெட் வேக உயர்வு - Seithipunal
Seithipunal


வளைகுடா பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் உலகளாவிய எரிபொருள் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததன் தாக்கம் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் கிடைக்கும்விகிதத்தையும் விலையையும் பாதித்துள்ளது.

இதன் காரணமாக பல நாடுகள் எரிபொருள் விலைகளை கணிசமாக உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது.இந்த சூழ்நிலையின் தாக்கம் அண்டை நாடான இலங்கையிலும் தெளிவாகப் பிரதிபலித்துள்ளது.

அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் திடீரென உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 இலங்கை ரூபாய் உயர்ந்து 366 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் அதிகரித்து 353 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், மண் எண்ணெய் விலையும் லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டு 195 ரூபாயாக உயர்ந்துள்ளது.

விலை உயர்வால் பொதுமக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய பதற்றம் மற்றும் எரிபொருள் பதுக்கல் போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கும் நோக்கில், இந்த புதிய விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Impact Rising Crude Oil Prices Petrol and Diesel Prices Skyrocket Sri Lanka


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->