ஈரான்-அமெரிக்கா போர்ப் பதற்றம் எதிரொலி...! தங்கம் விலை அதிர்ச்சியில்...இன்றைய தங்கம் விலை நிலவரம் தெரியுமா...? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலால் உலக சந்தையில் ஏற்பட்ட பதற்றம் தங்கம் விலையிலும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 1-ந்தேதி தங்கம் விலை திடீரென உயர்ந்த நிலையில், அதன் பின்னர் சில நாட்கள் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுடன் நகர்ந்தது.

கடந்த 7-ந்தேதி தங்கம் விலை திடீரென உயர்ந்து, ஒரு பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.1,20,400-க்கு சென்றது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னர் 9-ந்தேதி விலை சரிவடைந்து, பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும், கிராமுக்கு ரூ.14,950-க்கும் குறைந்தது. அதன் பிறகு நேற்று மீண்டும் விலை உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.1,20,400-க்கும், ஒரு கிராம் ரூ.15,050-க்கும் விற்பனையாகியது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,20,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.15,120-க்கு விற்கப்படுகிறது.வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fallout Iran US War Tensions Gold Prices Shock Do You Know Todays Gold Rates


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->