'மாணவர்கள் உயிர் விஷயத்தில் அலட்சியம் ஏன்'...? - திமுக அரசை தாக்கிய எடப்பாடி பழனிசாமி
Why Negligence Regarding Students Lives Edappadi Palaniswami Slams DMK Government
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தளப் பதிவில் காணொலி ஒன்றை வெளியிட்டு தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது,"கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் 43 அரசுப்பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

சிகிச்சைக்காக மருத்துவமனை படுக்கைகளில் சிறுவர்கள் படுத்திருக்கும் காட்சியை காணும்போது மனம் பதறுகிறது என்று தெரிவித்துள்ளார்.மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்திருந்தாலும், சில ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் உயிர் பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயத்தில், குறிப்பாக சத்துணவு திட்டத்தில் அரசு தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
2021 முதல் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதைப்பற்றி போதிய கவனம் செலுத்தாமல் மேடைகளில் “சாம்பார் சுவை எப்படி?” எனக் கேட்டு விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துவது இந்த அரசின் செயல் என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், தற்போது சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பள்ளி மாணவர்களின் ஆரோக்கியம் போன்ற முக்கிய விஷயங்களிலும் அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை மக்கள் விரைவில் ஆட்சியிலிருந்து அகற்றும் நாள் தூரத்தில் இல்லை என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Why Negligence Regarding Students Lives Edappadi Palaniswami Slams DMK Government