சூப்பர் ஹீரோ அவதாரத்திலிருந்து கிளாமர் ரூட் வரை… கல்யாணி பிரியதர்ஷனின் மாஸ் மாற்றம்...! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவின் இன்றைய முன்னணி நாயகிகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். 2017-ம் ஆண்டு வெளியான “ஹலோ” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமான இவர், 2019-ம் ஆண்டு தமிழில் “ஹீரோ” படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர் ஹிட் திரைப்படம் ‘லோகா – சாப்டர் 1 : சந்திரா’ அவரது திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதில் சூப்பர் ஹீரோ அவதாரத்தில் தோன்றி, ரத்தம் குடிக்கும் மோகினி கதாபாத்திரமாக ரசிகர்களை மிரள வைத்தார்.

ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்த இந்த படம், கல்யாணியை தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர வரிசையில் உறுதியாக நிறுத்தியுள்ளது.இந்த வெற்றியின் அலைகளில், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்துவரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு, பாலிவுட் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனுடன், அவரது திரைத் தோற்றத்திலும் மெல்ல மாற்றம் தென்படுகிறது.இனி ‘கிளாமர் ரூட்டிலும்’ காலடி எடுக்க முடிவு செய்துள்ள கல்யாணி, சமூக வலைதளங்களில் லேசான கவர்ச்சி மிளிரும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

பட நிகழ்ச்சிகளில் தோன்றும் அவரது உடைத் தேர்வுகளும், ‘தாராள’ ஸ்டைலிலும் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இதனால் அவரது ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த மாற்றத்தைப் பார்த்து, “சரியான நேரத்தில் சரியான பாதையில் கல்யாணி பயணிக்கத் தொடங்கிவிட்டார்” என சில முன்னணி நடிகைகள் கூட அவரை மனதார பாராட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.

நடிப்பும், நட்சத்திரப் பிரகாசமும் இணைந்த இந்த புதிய கல்யாணி பயணம், இனி எந்த உயரத்திற்கு பறக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From superhero avatar glamorous route Kalyani Priyadarshan massive transformation


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->