அதானி குழுமத்திற்கு ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு; முதலீட்டாளர்கள் கவலை..! - Seithipunal
Seithipunal


அதானி குழுமம், அமெரிக்காவில் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக கூறி, சில ஆண்டுகளுக்கு முன்பு புகார்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவின் பங்குச்சந்தை ஆணையம் செபி அமைப்பு விசாரணை நடத்தியது. இதில், முறைகேடுகள் எதுவும் இல்லை என்றே செபி அறிக்கை வெளியிட்டுயிருந்தது.

ஆனால், அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான எஸ்இசி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்குச் சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் அனுமதி கோரியது. அதனையடுத்து, அதானிக்கு சம்மன் அனுப்ப அனுமதி கேட்டு அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில், பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் 10 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரிவால் இன்று ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அத்துடன், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சிக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, அமெரிக்க ஒழுங்கு முறை ஆணையம் நீதிமன்றத்தை நாடியதை தொடர்ந்து, அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Adani Group suffered losses of up to rs 1 lakh crore in a single day


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->