போலி பேஸ்புக் கணக்கு; உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வாலிபர்கள்; இளம்பெண் அதிரடி கைது..!
A young woman who lured people for pleasure and committed financial fraud through a fake Facebook account has been dramatically arrested
பேஸ்புக்கில் போலியாக கணக்குதொடங்கி, வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த இளம்பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு, போலி இணைய தள முகவரியில், குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள், மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், புகார் கொடுத்த இளைஞர்களிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதோடு, சில விபரங்களை சேகரித்த நிலையில், இளைஞர்கள் ஏமாந்த போலி பேஸ்புக் ஐ.டி.யை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இந்த போலி கணக்கு எங்கிருந்து எந்த செல்போன் இணைப்பில் இந்த கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. எங்கிருந்து ஆக்டிவ் செய்யப்படுகிறது என்பதை கண்காணித்து, அது தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதன் போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த முகமது ஷாஜகான் என்பவரது மகள் நபிலா பேகம் (27) என்பவர் தான் பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி அதன் மூலம் இளம்பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்துள்ளமை கண்டிப்பிடிக்கப்பட்டதோடு, அதன் மூலம் இளைஞர்களை உல்லாசத்துக்கு அழைப்பது போல் லட்சக்கணக்கில் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பரமக்குடியில் நபிலா பேகத்தை நேற்று கைது செய்து, நாகர்கோவில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர், தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளதாவது: பேஸ்புக் ஐ.டி. பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற பெண்கள் தனித்தனியாக ரேட் எனக் குறிப்பிட்டு ஆபாச உரையாடலுக்கும், உடலுறவுக்கும் அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அந்த எண்ணில் பேசும் பெண் ஒருவர் நீங்கள் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம். ஆபாச வீடியோ கால் மற்றும் ஆபாச சேட்டிங் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறுவார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், அதனை நம்பி பலரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் இளம்பெண் ஒருவரை கைது செய்து உள்ளதாகவும், இளம்பெண்களுடன் வீடியோ கால் செய்ய தனி ரேட், வீடியோ காலில் ஆடையின்றி நிர்வாணமாக நின்று பேச தனி ரேட், ஆபாச சாட்டிங் செய்ய தனி ரேட், உல்லாசமாக இருக்க தனி ரேட் என கூறி பணம் வசூலித்து ஏமாற்றி உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
A young woman who lured people for pleasure and committed financial fraud through a fake Facebook account has been dramatically arrested