“தமிழ் நடிகைகளுக்கு நடிக்க தெரியாது” – மாளவிகா மோகனன் சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. அந்தப் பேட்டியில், “தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் சிலருக்கு சரியாக நடிக்கத் தெரியாது” என்று அவர் கூறிய கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மாளவிகா மோகனன், பிரபல ஒளிப்பதிவாளர் கேமராமேன் மோகனனின் மகள். தந்தையின் அனுமதியுடன் சினிமாவில் அறிமுகமான அவர், முதலில் மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்தார். அதன் பின்னர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார். குறுகிய நேரக் கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த வேடம் அவருக்கு முக்கியமான அடையாளத்தை கொடுத்தது.

‘பேட்ட’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்த மாளவிகா, பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘மாறன்’, பா.இரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ போன்ற படங்களில் நடித்தார். ‘தங்கலான்’ படத்தில் உடல், மன ரீதியாக கடுமையாக உழைத்ததாக அவர் கூறப்பட்டாலும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ‘பேட்ட’ மற்றும் ‘மாஸ்டர்’க்குப் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய ஹிட்களாக அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் கார்த்திக்கு ஜோடியாக ‘சர்தார் 2’ படத்தில் நடித்துவருகிறார். இதைத் தவிர வேறு புதிய தமிழ் படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் பெரிதாக வெற்றியடையவில்லை; அதில் அவரது கிளாமர் காட்சிகள் அதிகமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் மாளவிகா கூறிய கருத்து தான் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர்,
“சில தமிழ், தெலுங்கு நடிகைகள் சோகக் காட்சிகளில் மனதுக்குள் 1, 2, 3, 4 என்று எண்ணிக்கொண்டு முகபாவனைகளை வெளிப்படுத்துகிறார்கள். கோபக் காட்சிகளில் ஏ, பி, சி, டி என்று சொல்லிக்கொண்டு ஒரே மாதிரியாக நடிக்கிறார்கள். அவர்கள் உதட்டசைவுகளை மட்டும் கவனித்து, டப்பிங்கில் பார்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு படத்தில் மட்டுமல்ல; தங்கள் முழு கரியரிலும் இப்படித்தான் செய்கிறார்கள்” என்று கூறினார்.

இந்த கருத்து வெளியானதுமே, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. “தமிழ் நடிகைகளின் நடிப்பை விமர்சிக்கும் அளவுக்கு மாளவிகா என்ன பெரிய சாதனை செய்துவிட்டார்?”, “தங்கலானில் அவரது நடிப்பே பலருக்கு சிரிப்பை வரவழைத்தது” என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவின. மேலும், அவர் இதற்கு முன் அளித்த ஒரு பேட்டியில், நடிகையின் பெயரை சொல்லாமல் “மருத்துவமனை காட்சியிலும் முழு மேக்கப்புடன் நடிக்கிறார்” என்று கூறியிருந்தார். அது நயன்தாராவை குறிப்பிட்டே சொன்னது என்ற கருத்து அப்போது நிலவியது. அதற்கு நயன்தாரா தனது பாணியில் மறைமுகமாக பதிலளித்ததும் ரசிகர்களுக்கு நினைவில் உள்ளது.

மொத்தத்தில், மாளவிகா மோகனனின் இந்த பேச்சு, நடிகைகளின் நடிப்பு, தொழில்முறை ஒழுக்கம் குறித்து மீண்டும் ஒரு விவாதத்தை கோலிவுட்டில் கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சை அவரது தமிழ் சினிமா பயணத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil actresses donot know how to act Malavika Mohanan controversial statement


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->