தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு: செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு; தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..! - Seithipunal
Seithipunal


தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக்கும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் அவர்  'இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய பங்கு வகித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் உறவினரும் இயக்குநராக உள்ளாரா என்பதை அறிய விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சவுக்கு சங்கர் தாக்கல் செய்த இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரித்து வருகிறது. கடந்த 14-ஆம் தேதி விசாரணை நடந்தது. அப்போது,  இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

மீண்டும், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுவாமிநாதன், தமிழக அரசின் வழக்கறிஞர் ஜெனரல் பி.எஸ்.ராமனிடம் ,' தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் வலியுறுத்தியதாலேயே, தலித் இந்திய தொழில் வர்த்தக சபை (டிஐசிசிஐ) இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது என 2024 டிச.,16-இல் முதல்வரின் அறிக்கையை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.

அரசுடன் இணைந்த பிறகு தான், இந்த திட்டத்தை செயல்படுத்த டிஐசிசிஐயின் தலைவர் ரவி குமார் நாரா மற்றும் செல்வப்பெருந்தகையின் உறவினர் வீரமணி ஆகியோர் இணைந்து ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக மனுதாரர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுன் உண்மை தன்மையை அறிய விரும்புவதாகவும், இது உண்மையாக இருந்தால், உங்களுக்கு தான் பிரச்சினை என நீதிபதி கூறியுள்ளார். மேலும் சென்னை மெட்ரோபொலிட்டன் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீரேற்று வாரியம், இது குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 21-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savukku Shankar files a case against Selva Perundakai Court questions Tamil Nadu government


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->