சசிகலா பக்கம் தாவப்போகிறாரா? அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்.!
sasikala new plan for admk mp
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து கடந்த மாதம் 8ஆம் தேதியை தமிழகம் திரும்பினார். அப்போது அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அதிமுகவினர் சசிகலாவை கண்டுகொள்ளவில்லை.

சசிகலா சென்னை திரும்பியதும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தன்னை வந்து சந்திப்பார்கள் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், இதுவரையும் சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை. இதனால் அதிமுகவின் மிக முக்கிய நபர்களை தன் பக்கம் இழுக்கும் வேளையில் சசிகலா இறங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வகையில், அதிமுகவினர் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலத்தை உறுப்பினருமான வைத்திலிங்கத்தை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக டெல்டா அரசியலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதால் வருத்தத்தில் இருந்து வருகிறார் வைத்திலிங்கம். ஆகையால் ,அவரை எளிதில் தன் பக்கம் இழுக்க முடியும் என கருதி சசிகலா காய் நகர்த்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய வைத்திலிங்கம், நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாழ்வா? சாவா? என்கின்ற தேர்தல். நாம் வெற்றி பெறவில்லை எனில் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதை மனதில் வைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும், வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும்.

மழை நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர் இட ஒதுக்கீடு என பல்வேறு சாதனைகளை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்னும் பல திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளார். எனவே அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி பணியாற்றுங்கள். நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மீண்டும் அதிமுக ஆட்சிதான் என தெரிவித்துள்ளார். இதன்முலமாக, சசிகலா பக்கம் சென்றுவிடுவார் வைத்திலிங்கம் என்ற யூகங்களுக்கு நேரடியாக பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
sasikala new plan for admk mp