#சார்பட்டா படத்தில் விடுபட்ட 'டான்சிங் ரோஸ்' காட்சிகள் வெளியீடு.! பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் திரைக்கதை, நடிப்பு மற்றும் காட்சி அமைப்புகள் விறுவிறுப்பாக செல்வதால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில் குறிப்பாக சொல்ல வேண்டியது ஒன்று தான். அது 'டான்சிங் ரோஸ்' கேரக்டர் தான். இந்த கேரக்டர் மிக மிக பிரபலமடைந்துள்ளது. ஷபீர் நடிப்பு வேற லெவல். சண்டை காட்சிகளில் அற்புதம் செய்து இருக்கிறார்.

அதே சமயத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம், திமுகவின் புகழ் பாடும் திரைப்படமாக உள்ளது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக எமர்ஜென்சி காரணமாகத்தான் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக கதை சொல்லும் கதைக்கு பலரும் தங்களது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

உண்மை கதை என்று சொல்லி படம் எடுக்கும் 'அட்டகத்தி' பா ரஞ்சித், எப்போதும் போல தனக்கு தெரிந்த கதையை மட்டும் வைத்து படம் எடுத்துள்ளதாகவே பலரும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், சார்பட்டா படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் தொடர்பு இல்லாதது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று, இயக்குனர் அட்டகத்தி பா ரஞ்சித்-க்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த சார்பட்டா திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் மா சுப்புரமணியன், "சார்பட்டா திரைப்படத்தில் 'டான்சிங் ரோஸ்' கேரக்டர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குத்துச்சண்டையை பார்த்து தான் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் விடுபட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. நீங்கள் பார்க்கவில்லை என்றால்., சமூகவலைத்தளத்தில் தேடி பாருங்கள். ஜெயக்குமார் அருமையாக சண்டை போட்டு இருப்பார்" என்று தெரிவித்துள்ளார். .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sarpatta dansing rose


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->