ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மறுப்பா? டிஜிபி.,க்கு எச்சரிக்கையுடன் வந்த நோட்டிஸ்! - Seithipunal
Seithipunal



வரும் அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. 

இந்த ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டி.ஜி.பி-யிடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரணை செய்த நீதிபதி இளந்திரையன், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கூறிய விண்ணப்பத்தை நிராகரித்த போலீசருக்கு, நீதிமன்ற அவமதிப்பு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருவள்ளூர் காவல்துறை, உள்துறை செயலாளர், தமிழக டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், "திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காமல் நிராகரித்து இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல். அனுமதி மறுத்த உத்தரவை திரும்ப பெறவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நேரிடும்" என்று அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RSS notice issue to DGP sep


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->