சென்னையில் இந்த சக்தியை பயன்படுத்தி இவற்றை எல்லாம் செய்யலாம்., அரசுக்கு ஆலோசனை சொன்ன ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


மின்சக்தி- கட்டிடங்கள்

உலகளவில் 19% கரியமிலவாயு வெளியேற்றத்திற்கு கட்டடங்கள் காரணமாக உள்ளன. கட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரம், ஆற்றல் மூலங்களில் மாற்றங்களை கொண்டுவருவதன் மூலமாக - கட்டடங்களில் இருந்து வெளியாகும் கரியமிலவாயுவில் 50% அளவை குறைக்க முடியும். கூடவே, மின்சார செலவினையும் மீதமாக்க முடியும்.

சென்னை மாநகரில் கட்டடங்கள் மூலம் உருவாகும் கரியமியலவாயு அளவை குறைக்க பின்வரும் நடவடிக்கைகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

சூரிய ஆற்றல் மேற்கூறைகள்

சென்னையில் மிகப்பெரிய அளவில் சூரிய மின்சக்தியை தயாரிக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அரசு திட்டமிட்டு முயற்சித்தால் காற்று மாசுபாட்டை தடுத்தல், புவிவெப்பமடைதலுக்கு காரணமாகும் மாசுக்களை குறைத்தல், பொருளாதார சேமிப்பு என பலவழிகளில் பலன் கிடைக்கும். சென்னையில் ஒட்டுமொத்தமாக 1.38 gw (ஜிகாவாட்) அளவுக்கு சூரிய மின்சக்தி தயாரிக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், வீட்டு கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்பதன் மூலம் 586 mw (மெகாவாட்) கிடைக்கும். இது மொத்த அளவீட்டில் 46% ஆகும்.

அரசு கட்டங்கள், கல்லூரிகள், பள்ளிகள், வழிபாட்டு இடங்கள், பொது கட்டடங்கள், வர்த்தக நிறுவங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் சூரிய மின்சக்தி தயாரிப்பதை தீவிரப்படுத்த வேண்டும். வீடுகளில் சூரிய மின்சார கட்டமைப்புகளை அளிப்பதை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramadoss says about solar system


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->