உயிர் பயத்தை காட்டுறாங்க., திமுக எம்எல்ஏ.,விற்கு கொலை மிரட்டல் | காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


ராஜபாளையம் சட்டமன்றத்தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, ராஜபாளையம் நகர அதிமுக செயலாளர் வக்கீல் முருகேசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தரப்பில் சேத்தூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில், "கடந்த ஜனவரி 21 ஆம் தேதி ராஜபாளையம் வட்டம், தேவதானத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜபாளையம் நகர அதிமுக செயலாளர் வக்கீல் முருகேசன், வன்முறையைத்  தூண்டும் வகையிலும், அசிங்கமான வார்த்தைகளாலும், என்னை வெட்டிக் கொலை செய்ய உள்ளதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார்.  

பல கொலை வழக்குகளில் இந்த வக்கீல் முருகேசன் சம்பந்தப்பட்டவர். எனவே, என் உயிருக்கு ஆபத்து உள்ளது. வக்கீல் முருகேசன் இந்த கொலை மிரட்டல் பேச்சால் எனக்கு உயிர் பயமும்,அவமானமும் ஏற்பட்டுள்ளது." என்று எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் சேத்தூர் காவல்நிலைய போலீசார் வக்கீல் முருகேசன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajapaliyam DMK MLA complaint against murugesan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->