ஹீரோன்னு நினைப்பு! ரயிலில் அடிபட்டு பலியான இளைஞர்! அதிர்ச்சி வீடியோ!
Railway gate train bike accident Viral Video
உத்தரப் பிரதேசத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தபோதும், அதை மீறி கடக்க முயன்ற இளைஞர் ரெயில் மோதி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (அக்டோபர் 13) கிரேட்டர் நொய்டா அருகே தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, ரெயில்வே கிராசிங்கில் சென்றார். அப்போது கேட் ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. இருப்பினும், அவசரமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற அவர், கேட் அடியில் நுழைந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. பைக்கை எழுப்ப முயன்றபோது, அதே நேரத்தில் வேகமாக ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் மிக அருகில் வந்ததை கண்டு துஷார் பைக்கை விட்டுவிட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் சில வினாடிகளுக்குள் ரெயில் அவரை மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தின் காட்சிகள் அங்கிருந்தோர் எடுத்த வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு நாடு முழுவதும் 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகள் பதிவாகி, 1,007 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது இந்தியாவில் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
English Summary
Railway gate train bike accident Viral Video