பிரதமர் நரேந்திர மோடியிடம் மன்னிப்பு கேட்ட பஞ்சாப் முதலமைச்சர் சன்னி.!  - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளுக்கு, அம்மாநில முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். (அரசியல் ரீதியாக வருத்தம் என்பது மன்னிப்பு பொருள் குறிக்கும்). 

பிரதமர் மோடி நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று இருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் சிலர் அவரின் வாகனத்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு அச்சறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பாஜகவினர் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகினர். தேசியவாதிகளும் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயத்தில் போராட்டக்காரர்கள் நாங்கள் பிரதமரின் கார் தான் வருகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை., இல்லை என்றால் நாங்கள் தடுத்து நிறுத்தி இருக்க மாட்டோம், போராட்டத்திலும் ஈடுபட்டு இருக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில பயணத்தின்போது பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டு தொடர்பாக, அவருடன் காணொளிக்காட்சி உரையாடலின் போது பேசிய முதலமைச்சர் பஞ்சாப் முதலமைச்சர் சரண்சிங் சன்னி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நேற்று கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது பிரதமருடன் உரையாடிய பஞ்சாப் மாநில முதலமைச்சர் சன்னி, "பஞ்சாப் பயணத்தின்போது நடைபெற்ற பாதுகாப்பு குறைபாடுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கும், எங்கள் அனைவருக்கும் மரியாதைக்குரியவர்.

உங்களது பஞ்சாப் பயணத்தின் போது என்ன நடந்ததோ.., அதற்காக நான் வருந்துகிறேன் என்று பஞ்சாப் முதலமைச்சர் சன்னி தெரிவித்தார். மேலும், பிரதமர் வாழ்நாள் முழுவதும் உற்சாகத்துடனும், ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்ற ஒரு ஹிந்தி கவிதையையும் பிரதமருக்கு வாசித்து வாழ்த்து கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjab cm apology to pm modi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->