திமுக எம்எல்ஏ.,க்கள் 3 பேர் கைது!
Puduvai DMK MLA Arrested
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று, தி.மு.க சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் புதுவையில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

புதுவை சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா தலைமை வகித்த இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் முற்றுகையிட முயன்றதை அடுத்து, எதிர்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட 3 திமுக எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர்.