அடிமட்டத்துக்கு இறங்கிய காங்கிரஸ்.! தனித்து நிற்கும் நிலைக்கு வந்த திமுக.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் காங்கிரஸின் நிலை படுமோசமாக மாறியுள்ளது. இதனை காங்கிரஸின் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "காங்கிரஸ் கூட்டணியில் திமுக கேட்கும் தொகுதிகளை கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். அவர்கள் அதிகமாக கேட்டாலும் அதையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதிகமாக கேட்டாலும் நாங்கள் தாயார் தான்" என்று ஒரேடியாக அடிமட்டத்துக்கு இறங்கி வந்துவிட்டதாக சொல்லாமல் சொல்லி பேட்டியளித்துள்ளார்.

நாராயணசாமியின் இந்த பேட்டி காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் இதற்கு முன்பாகவே காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியில் தான் உள்ளனர். அதனால் இது அவர்களை பெரிதும் பாதிக்கவில்லை.

புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெகத்ரட்சகன், புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சியை கொண்டு வருவோம் என்றும், 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றும் சூளுரை ஆற்றினார். இது கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் இல்லையில்லை திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி வலுவாக உள்ளது என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் ராஜினாமா செய்தனர். அதே சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக எம்எல்ஏ ஒருவரும் தனது பதவியை ராஜினாமா செய்து பெரும் அதிர்ச்சியை காங்கிரசுக்கு அளித்தார்.

இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக எத்தனை தொகுதிகளை கேட்டாலும் எவ்வளவு அதிகமாக கேட்டாலும் அதைக் கொடுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்று நாரணயசாமி சொல்லுவதில் எந்த அதிர்ச்சியும் இல்லை. 

புதுச்சேரியில் கள நிலவரப்படி அடுத்து ஆட்சிக்கு காங்கிரஸ் வர வாய்ப்பே இல்லை என்று மக்கள் தீர்மானித்துள்ளதாகவும், அதனடிப்படையில் காங்கிரஸை கழட்டி விட்டு திமுக தனித்துப் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒருவேளை திமுக -காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் கூட, அது திமுகவின் தலைமையில் தான் அந்த கூட்டணி அமையும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் காங்கிரஸின் நிலைமை 18 இல்லை 20 என்ற நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸின் நிலைமை அடிமட்டத்துக்கு சென்று விட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUDUCHERRY Congress now a stage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal