ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : சிக்கலை உண்டாக்கிய முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! திரும்பும் பக்கமெல்லாம் எதிர்ப்பால் அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்!  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. 

ஆளுங்கட்சியான திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ.வி.கே.எஸ்.இளங்கோவனும், எதிர்க்கட்சித் தரப்பில் அதிமுகவை சார்ந்த தென்னரசுவும், நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் இருக்கும் நிலையில், பிரச்சாரம் களைகட்டி வருகிறது. 

வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களாகவும், பணமாகவும் வழங்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையிலும், தேர்தல் ஆணையம் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என கூறி வருகிறது. குறைவான தொகையே கைப்பற்றியதாகவும் தெரிவித்திருக்கிறது. 

இந்த நிலையில் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக அளித்த வாக்குறுதியான குடும்பப் பெண்களுக்கான உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அதனை வருகின்ற மார்ச் மாத பட்ஜெட் கூட்டத்தொடரில், எப்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.

இது தேர்தல் விதி மீறல் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வருகிறது. அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, குடும்ப பெண்களுக்கான உரிமை தொகை ரூபாய் 1000 குறித்த அறிவிப்பானது ஸ்டாலினுடைய தோல்வி பயத்தின் வெளிப்பாடு எனவும், இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் ஆணையம் இன்னும் கண்ணை மூடிக்கொண்டுதான் இருக்குமா? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வழங்கப்படும் பரிசுப் பொருட்களும் பணமும் ஊடகங்களின் வழியாக வெளியே தெரிந்தும், பிற தொகுதி மக்களே எங்களுக்கு இடைத்தேர்தல் வராதா என வெளிப்படையாக பேசுவது தெரிந்தும், தேர்தல் ஆணையம் அமைதி காப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது தேர்தல் ஆணையத்திற்கு மேலும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PT leader dr Krishnasamy slams EC for Erode east by election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->