தலாய் லாமா- க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி! 90- வயது பிறந்தநாள் கொண்டாட்டம்...
Prime Minister Modi congratulates Dalai Lama on his 90th birthday
திபெத்திய நாட்டு புத்த மதத் தலைவர் 'தலாய் லாமா' ஜூலை 6 ஆம் தேதியான இன்று, தனது 90 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

இதனையொட்டி தனது சீடர்களால் இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடினார்.
இந்த நிலையில், தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தள பதிவு வெளியிட்டதாவது,"தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாளையொட்டி 140 கோடி இந்தியர்களுடன் சேர்ந்து நானும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக அவர் இருந்து வருகிறார்.அவரது செய்தி அனைத்து மதங்களிலும் மரியாதை, போற்றுதலை தூண்டியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Prime Minister Modi congratulates Dalai Lama on his 90th birthday