பெருமிதம்! தலைவர் விஜய் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும்...! -புஸ்ஸி ஆனந்த் - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் ஆகஸ்ட் 25-ந்தேதி தமிழக வெற்றிக் கழக கட்சியின் 2-வது மாநில மாநாடு, மதுரை அருப்புக்கோட்டை சாலையிலுள்ள பாரப்பத்தி பகுதியில் நடைபெறவுள்ளது. மேலும், இன்று காலை மாநாட்டையொட்டி பந்தல் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து மாநாட்டிற்கு அனுமதி வழங்கும்படியும் மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மதுரை 3 மாவட்ட பகுதியிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்திடம் புஸ்ஸி ஆனந்த் கோரிக்கை மனு அளித்தார்.

அதன்பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,"தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆகஸ்ட் 25-ந் தேதி 2-வது மாநாடு நடத்துவதாக எங்கள் தலைவர் அறிவித்திருக்கிறார். இன்று காவல்துறையிடம் அனுமதி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு நடத்துவதற்கு விதிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு இடையூறு இல்லாமல் சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 கண்டிப்பாக வெற்றி மாநாடாக இருக்கும். தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும். முதல் மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களை விட 2-வது மாநாட்டில் அதிகளவில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக இருக்கும்" எனத் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pride Whatever leader Vijay toucheS it will be a victory Pussy Anand


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->