இனி பெண்கள் ஓசியில் போகாதீங்க.. பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று தேமுதிக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், "சட்ட ஒழுங்கை முதல்வர் தனது கைகளில் வைத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக தான் இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார். 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "பேருந்தில் இனி ஓசியில் பயணம் செய்ய வேண்டாம் என்று தமிழகத்தில் இருக்கும் பெண்கள் அரசை புறக்கணிக்க வேண்டும். அதுதான் திமுகவுக்கு கொடுக்கும் தக்க பதிலடி. 

விழா காலத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தி விட்டார்கள். எல்லாமே வியாபாரம் தான் என்றால் இந்த அரசும் வியாபார ரீதியாக தான் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha vijayakanth request to Tn women


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->