ஜே.சி.டி.பிரபாகரின் 17-வது சட்டமன்ற பேரவை தலைவர் பணி சிறக்க  வாழ்த்துக்கள் - மருத்துவர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக சட்டப் பேரவையின் 17-வது சட்ட மன்ற பேரவைத் தலைவராக தேர்வாகியுள்ள ஜே.சி.டி.பிரபாகர் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ச.இராமதாசு வாழ்த்து செய்தி

தமிழக சட்டப் பேரவையின் 17-வது சட்டமன்ற பேரவைத் தலைவராக தேர்வாகியுள்ள ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் நன்கு அரசியல் அனுபவம் மிக்கவர். சட்டப் பேரவை நடைமுறைகளை அறிந்தவர். 1980-ஆம் ஆண்டு அவரது இளம் வயதிலேயே வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு தேர்வு செய்யப்பட்டவர். நேர்மையான சட்ட மன்ற உறுப்பினர் என்ற பல தரப்பினரும் பாராட்டி உள்ளனர். தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல் வாதிகளிடமும் முன்னாள் முதல்வர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர். சமூகநீதி கொள்கையில் முழுமையான அக்கறை கொண்டவர். சட்ட மன்ற நடைமுறை விதிகளில் சிறந்த அனுபவம் உள்ள இவரை சட்டமன்ற பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்க செய்தமைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை கடைப்பிடித்து  நடுநிலையாக அனைத்து தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முறையான அவகாசத்தையும் நேரத்தையும் வழங்கி சட்டமன்றத்தில் தமிழக மக்களின் நலன் கருதி நல்ல திட்டங்களை கொண்டு வரவும், தமிழக வளர்ச்சிக்கு முறையான ஆரோக்கியமான கருத்துக்களை பிரதிபலிக்கும் ஒரு சட்டமன்ற பேரவையாக இந்த சட்ட மன்ற பேரவை இருக்க வேண்டும். அதற்கு சட்டமன்ற பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. ஜே.சி.டி.பிரபாகரின் 17-வது சட்டமன்ற பேரவை தலைவர் பணி சிறக்க  வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk ramadoss wish jcd prabakar


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->