தமிழ் நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ் மக்காச்சோளத்தை மாநில அரசு கொள்முதல் செய்ய வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரிப்பதற்கும், எத்தனால் தயாரிப்பதற்கும் மக்காச்சோளம் மிக முக்கியமான மூலப் பொருளாக பயன்பட்டு வருகிறது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், பிஹார், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மக்காச்சோளம் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. மக்காச்சோள சாகுபடியில் ஈடுபடுமாறு மத்திய-மாநில அரசுகள் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன.

2017–18 முதல் 2023–24 வரை சராசரியாக 369.79 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரடப்பட்டு 26.59 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் மக்காச்சோள உற்பத்தியில் மத்திய பிரதேசம் முதலிடத்தையும், அடுத்து கர்நாடகா, மஹாராஷ்ட்ரா என 6 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் மக்காச்சோள உற்பத்தியில் கள்ளக்குறிச்சி, அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, தருமபுரி மற்றும் பெரம்பலூர் முன்னிலையில் உள்ளது.

அண்மையில் பெரம்பலூரில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,400 கொள்முதல் விலை அறிவித்து, அதை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். கட்டுப்படியான விலையை பெறுவதற்கு அரசை எதிர்த்து இன்னமும் விவசாயிகள் போராடத்தான் வேண்டியுள்ளது.

நடப்பு ஆண்டு மக்காச்சோளத்திற்கு மத்திய வேளாண் விலை நிர்ணய ஆணையம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,400 ஆதார விலையாக அறிவித்துள்ளது. பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தை அதிக பட்சமாக ரூ.1,600 கொடுத்து தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்ப னை கூடத்திற்கு வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ.1,700-க்கு கீழ் மட்டுமே கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவிலிருந்து வரிவிலக்குடன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ள மத்திய அரசை கண்டிக்கிறேன். மத்திய அரசு குவிண்டால் ரூ.2,400 என குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்துள்ளது. தமிழ் நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ் மக்காச்சோளத்தை மாநில அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

உத்தர பிரதேச அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் மக்காச்சோளத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்து வருகிறது. கர்நாடக மாநிலம் ஒவ்வொரு விவசாயிடமிருந்தும், 50 குவிண்டால் வரை குறைந்தபட்ச ஆதார விலை திட் டத்தின்கீழ் தனது மாநில கூட்டுறவு துறை மூலமாக கொள்முதல் செய்து வருகிறது.

தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு உரிய வகையில் கோரிக்கை வைத்து, தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய கட்டமைப்பும், வேளாண் துறையின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும் இருக்கிறது. இதை பயன்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க அண்டை மாநிலங்களைப் போல இழப்பீட்டு மானியம் வழங்கி ஈடு செய்து விவசாயிகளை காத்திட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk ramadoss tn govt


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->