இந்தத் தவறு மீண்டும் தொடரக்கூடாது... தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் கண்டனம்!
pmk ramadoss condemn to TVK Govt vijay tamil thai vazhthu issue
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசியல் பண்பாடு மற்றும் மரபுகளின் எந்த ஒரு அரசு நிகழ்வாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். நிகழ்ச்சி நிறைவடையும்போது தேசிய கீதம் பாடப்பட்டுவது பல ஆண்டுகளாக மரபாக உள்ளது. இந்த மரபு தான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற தமிழக முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்வில் இந்த பாரம்பரிய மரபு மாற்றப்பட்டுள்ளது. இன்றைய தமிழக முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வை ஆளுநர் மாளிகையின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் தவறு மீண்டும் தொடரக்கூடாது. புதியதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு இதன் பிறகு நடைபெற உள்ள அனைத்து நிகழ்வுகளிலும் மற்றும் விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். நிகழ்ச்சிகள் தொடங்கும் போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தையும், நிறைவடையும்போது தேசிய கீதத்தையும் பாடுவதற்கு வழி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
pmk ramadoss condemn to TVK Govt vijay tamil thai vazhthu issue