கேட்பவர்களின்  இதயத்தை நடுங்கச் செய்யும் இத்தகைய கொலைகள் - டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த  சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூவரை கொடூரமாக படுகொலை செய்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

கேட்பவர்களின்  இதயத்தை நடுங்கச் செய்யும் இத்தகைய கொலைகள் கண்டிக்கத்தக்கவை. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கொடூரமாக படுகொலை செய்து  நகைகளை கொள்ளையடிக்கும்  அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால்,  தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா?  

காவல்துறை அதன் கடமைகளைச் செய்கிறதா  அல்லது ஆளுங்கட்சியினரின் குற்றங்களை மறைத்து, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறாதா? என்ற வினா எழுகிறது.  

திராவிட மாடல் ஆட்சியில் எத்தனை வினா எழுப்பினாலும் விடை கிடைக்காது என்பது தான் வேதனையான உண்மை.

தமிழ்நாட்டின் காவல்துறையினர் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினருக்கு இணையானவர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுப் பத்திரம் வாசித்து இரு நாட்கள் ஆவதற்குள் இப்படி ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  

அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்குக் கூட இயலாத நிலையில் தான் தமிழ்நாட்டு அரசும், காவல்துறையும் உள்ளன. தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு  சிறப்பாக பாதுகாக்கப்படுவதற்கு இது தான் சான்றா? என்பதை அரசும், காவல்துறையும் விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மக்களால் நிம்மதியாக வெளியில் தான் நடமாட முடியவில்லை என்றால், நிம்மதியாக வீட்டில் கூட உறங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. 

ஆனால்,  மக்களின் துயரங்கள் எதையுமே புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

தமிழ்நாட்டின் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கவும், தமிழ்நாட்டு மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Condemn to TNGovt MK Stalin Law and Order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->