திமுகவினரின் அராஜகம்.. "பள்ளி மாணவர்களின் காலில்" விழுந்த பாமக எம்எல்ஏ.. நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருளை மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் விடாமல் திமுக நிர்வாகிகள் தடுத்துள்ளனர். இதனால் பாமக தரப்பிற்கும் திமுக தரப்பிற்கும் இடையே மாணவ மாணவிகள் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

திமுக பிரமுகர் ராஜ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பாமக எம்எல்ஏ அருளை தடுத்து இலவச மிதிவண்டிகளை நாங்கள் கொடுத்துக் கொள்கிறோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு மாணவர் மத்தியில் பேசிய பாமக எம்எல்ஏ அருள் பள்ளி வளாகத்தில் இது போன்ற சம்பவம் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வு நடக்காது என நம்புகிறேன்.

ஒழுக்கத்தை கற்கும் இடத்தில் உங்களை அசிங்கப்படுத்தி விட்டனர். உங்களை அசிங்கப்படுத்தியவர்களுக்கு சேர்த்து காலில் விழுகிறேன்என தெரிவித்து மாணவர்கள் முன்னிலையில் காலில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடி இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk MLA arul fell at school students feet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->