#சென்னை || பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள Dr அன்புமணி இராமதாஸ் இன்று முக்கிய ஆலோசனை.! இன்னும் சற்றுநேரத்தில்...,  - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று திருவள்ளூர் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2000 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகள் முக்கிய தீர்மானமாக பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்படுவதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக நலன் சார்ந்த 8 தீர்மானங்கள் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அணிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கட்சியின் பல்வேறு அணிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகளுடன் நாளை (29.05.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் விடுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk leader Dr Anbumani Ramadoss meet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->