கூடுகிறது பா.ம.க. அவசர செயற்குழுக் கூட்டம்.! நாள் குறித்த ஜி.கே.மணி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஏப்ரல் 2 சனிக்கிழமை பா.ம.க. அவசர செயற்குழுக் கூட்டம் கூட உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், "பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் (02.04.2022) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சிவானந்தா சாலையில் பொதிகைத் தொலைக்காட்சி எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த அவசர செயற்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். 

வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா. அருள்மொழி, கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்  பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், பா.ம.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பார்கள்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது; அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு குறித்தும், அதனடிப்படையிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவசர செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk Emergency Executive Committee Meeting April 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->