அதான் CM ஸ்டாலினை சந்திச்சிட்டிங்களே... அப்புறம் என்ன? ஓபிஎஸ்-க்கு பாஜக பதிலடி!
PM Modi O Panneer Selvam Nainar Nagendran BJP ADMK DMK Alliance
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் பதிலளிக்கவில்லை என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பாஜக மாநில தலைவராக இருந்துகொண்டு உண்மைக்கு மாறான கருத்துக்களை பேச வேண்டாம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்க்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “ஓ.பி.எஸ் என்னை ஒருபோதும் அழைக்கவில்லை. அதற்கு மாறாக நானே அவரை கைபேசியில் தொடர்புகொண்டேன்” என்றார்.
மேலும் அவர், “ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமா? அவரிடம் அதற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இருக்காது. அவர் என்னை விமர்சிக்கிறார், ஆனால் நான் அவரைப்பற்றி தவறாக பேச விரும்பவில்லை.
ஏற்கனவே அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். ஒரு முடிவு எடுத்த பிறகு இப்படி காரணங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று நயினார் தெரிவித்தார்.
English Summary
PM Modi O Panneer Selvam Nainar Nagendran BJP ADMK DMK Alliance