'கலாம் -1200' திட மோட்டார் சோதனை வெற்றி!!!விக்ரம் -1 ராக்கெட் விரைவில்...! - ISRO 
                                    
                                    
                                   Kalam1200 solid motor test successful Vikram1 rocket coming soon ISRO
 
                                 
                               
                                
                                      
                                            ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அந்த நிறுவனத்தில் ‘விக்ரம்-1' என்ற தனியார் ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விரைவில் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இதற்கான ராக்கெட் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், ராக்கெட்டின் முதல் நிலை உந்துவிசைக்காக ‘கலாம்-1200' என்ற திட மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.இது ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள நிலையான சோதனை வளாகத்தில் இந்த மோட்டார் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
அது வெற்றிகரமாக நடந்து முடிந்தநிலையில், இதுதொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது,“விக்ரம்-1 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட இருக்கும் கலாம்-1200 திட மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.
இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் திட எரிபொருள் ஆலையில் தயாரிக்கப்பட்ட மிக நீளமான ஒற்றைக்கல் மோட்டார் ஆகும். இது 11 மீட்டர் நீளம், 1.7 மீட்டர் விட்டம் கொண்டதாகும். இது 30 டன் திட எரிபொருளை தாங்கியுள்ளது. இந்த மோட்டாரின் சோதனை தற்போது வெற்றியடைந்துள்ளது.
இந்த சோதனை இந்திய அரசின் விண்வெளி கொள்கை-2023 உடன் ஒத்துப்போகிறது. இது தனியார் நிறுவனங்கள் இந்தியாவின் விண்வெளி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இஸ்ரோவின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இந்த சோதனை ஒரு முக்கிய மைல்கல் ஆகும்” என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Kalam1200 solid motor test successful Vikram1 rocket coming soon ISRO