கடும் எதிர்ப்பு! ரஷ்யா செய்தவற்றிற்காக எந்த விருதையும் உக்ரைன் கொடுக்காது! -ஜெலன்ஸ்கி
Strong protest Ukraine not give any award for what Russia did Zelensky
வருகிற 15-ந்தேதி ரஷ்ய அதிபர் புதினை, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் சந்தித்து உரையாட இருக்கிறார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்த போரை,ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனையும் சேர்க்க வேண்டும் என அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி:
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு பதிவிட்டதாவது,"உக்ரைனின் பிராந்திய இறையாண்மையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. நீடித்த அமைதிக்கான பேச்சுவார்த்தை மேஜையில் உக்ரைனின் குரலும் உள்ளடக்கியிருக்க வேண்டும்’ என பதிவிட்டு இருந்தார்.
மேலும் அவர், ‘உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரான முடிவுகளாகும். அவை எந்த பலனையும் தராது. செத்துப்போன முடிவுகள். அவை ஒருபோதும் வேலை செய்யாது’ என்றும் கடும் எதிர்ப்பை தெரிவித்து பதிவு செய்திருந்தார்.
மேலும் அவர் கூடுதலாக ,"ரஷ்யா செய்தவற்றுக்காக எந்த விருதையும் உக்ரைன் கொடுக்காது" என்று தெரிவித்திருந்த ஜெலன்ஸ்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தனது நிலத்தை உக்ரைன் மக்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்" என்றும் சாடியிருந்தார்.இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
Strong protest Ukraine not give any award for what Russia did Zelensky