பிரதமர் மோடியை வரவேற்க சொல்கிறாரா இபிஎஸ்?!
PM Modi ADMK EPS Election 2026 BJP Alliance
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 10.35க்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வருகிறார். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க நிகழ்வில் பங்கேற்ற பிறகு விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார்.
அங்கு பிரதமரை வரவேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் இருப்பார். இவருடன் அதிமுக முக்கிய தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் பிரதமருடன் சந்தித்து பேச உள்ளனர்.
இவ்வருகை, பிரதமரின் இரண்டு நாள் தமிழக பயணத்தின் ஒரு பகுதியாகும். தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு விழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் திருச்சிக்கு வருகிறார்.
விமான நிலைய வருகையைக் தொடர்ந்து, பிரதமர் பாதுகாப்பு வாகனக் குழுமத்துடன் சாலை மார்க்கமாக ராஜா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று இரவு தங்கவுள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி திருச்சி முழுவதும் காவல் துறையினர் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விமான நிலையம் மற்றும் நகரத்தின் முக்கிய சாலைகள் முழுவதும் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
PM Modi ADMK EPS Election 2026 BJP Alliance