ஆந்திராவில் தடம்பதித்த பாட்டாளி மக்கள் கட்சி!
Pattali Makkal Katchi makes its mark in Andhra
சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து சாதிக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப வகுப்புவாத பிரதிநிதித்துவம், மது ஒழிப்பு போதையில்லா தமிழகம்,நாட்டின் வளர்ச்சி என்ற நோக்கத்திற்காக தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் சென்னையில் சீரணி அரங்கில் மருத்துவர் ச.ராமதாசு அவர்களால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியின் கொள்கை தலைவர்களாக அண்ணல் அம்பேத்கர்,பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தத்துவ மாமேதை காரல் மார்க்ஸ் ஆகியோர்களை முன்னிறுத்தி அரசியல் களத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் செயல்பட்டுவந்த பாமக. தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆந்திரா மாநிலத்திலும் தடம்பதித்துள்ளது.
தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலும் தனது அரசியல் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சியில் பாட்டாளி மக்கள் கட்சி ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று ஆந்திராவில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், ஆந்திர மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாமக முன்னாள் மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் ஆந்திர மாநிலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் மாவட்ட வாரியாக கட்சி கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆந்திரா மாநிலம் முழுவதும் கட்சியின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் வலுவான நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வது, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாமக, தற்போது அண்டை மாநிலமான ஆந்திராவிலும் தனது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருவது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, எதிர்கால கட்சி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் பாமக முன்னாள் மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் அடிமட்ட அளவில் நிர்வாகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளை கொண்டு செல்ல வேண்டும் என்றும், வலுவான நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தைத் தாண்டி ஆந்திராவிலும் தனது கட்சி கட்டமைப்பை விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், கர்நாடகாவிலும் விரைவில் தனது கட்சி கட்டமைப்பை விரிவுபடுத்த பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.



English Summary
Pattali Makkal Katchi makes its mark in Andhra