எங்க திட்டத்துல உங்க ஸ்டிக்கரா...? - கல்வெட்டை அகற்றியதற்கு கொதித்தெழுந்த திமுக...! - Seithipunal
Seithipunal


திராவிட மாடல் அரசால் தொடங்கப்பட்ட நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் மீது பெயர் ஒட்டும் அரசியலில் விஜய் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் திமுக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"சென்னையின் நீண்டகால குடிநீர் தேவைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையில், உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொண்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், சென்னையின் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் மாநகரப் பரப்பளவு விரிவடைந்ததை கருத்தில் கொண்டு, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திட்டத்தைப் பார்வையிட முதலமைச்சர் விஜய் வருவதை முன்னிட்டு, அங்கு இருந்த அடிக்கல் கல்வெட்டு அகற்றப்பட்டிருப்பதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.மேலும், ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்கள் கடந்தும் புதிய மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தத் தவறிய விஜய் அரசு, முந்தைய அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களைத் தனது சாதனையாக முன்னிறுத்த முயற்சிப்பதாக திமுக விமர்சித்துள்ளது.

ஏற்கனவே திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் அடையாளமான கல்வெட்டை அகற்றி, அதன் மீது அரசியல் முத்திரை பதிக்க முயற்சிப்பது வெட்கக்கேடான செயல் அல்லவா என்றும், இது ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையையே வெளிப்படுத்துவதாகவும் திமுக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is your sticker our plan DMK furious over removal inscription


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->