திமுகவிற்கு அடிமேல் அடி.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
oraniyil tamilnadu case DMK SC
"தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் பரப்புரையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இதன் முக்கிய நோக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கை தான். இதற்காக மக்களிடம் திமுகவினர் வீடு தேடி சென்று அவர்களின் செல்போன் எண்ணிற்கு OTP கேட்க தொடங்கினர்.
இது சர்ச்சையான நிலையில், அதிமுக தரப்பில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் OTP வாங்க திமுகவிற்கு தடை விதித்தது.
இதனையடுத்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
English Summary
oraniyil tamilnadu case DMK SC