தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை எதிர்காலத்தில் ஒரு ட்ரில்லியன் டாலராக மாற்றுவதே அரசின் குறிக்கோள்! - மு.க. ஸ்டாலின்
governments goal to make Tamil Nadus economy trillion dollar future MK Stalin
சட்ட மன்ற தேர்தலுக்காக கள ஆய்வு மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் இன்று தூத்துக்குடியில் நிகழும் விழாவில் பங்கேற்றார்.இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 41 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அப்போது அவர் தெரிவித்ததாவது,' தென் தமிழ்நாடு பற்றி கலைஞர் கண்ட கனவை தற்போது தொடர்ந்து நனவாக்கி வருகிறோம். தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கான கட்டமைப்பை திராவிட மாடல் அரசு சிறப்பாக உருவாக்கியுள்ளது.
இதில் முத்துநகரான தூத்துக்குடியில் 2-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.அதுமட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் கப்பல்களுக்கு நுழைவு வாயில் தூத்துக்குடி தான்.
அங்கு செமி கண்டக்டர், மின் வாகனம், பசுமை ஹட்ரஜன் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.
இதில் வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம். சொன்னதை செய்வோம் என்பது தான் திமுக அரசின் குறிக்கோள்" என்று தெரிவித்தார்.இதனை வரவேற்கும் விதமாக மக்கள் கரகோஷங்கள் எழுப்பி வரவேர்த்தனர்.
English Summary
governments goal to make Tamil Nadus economy trillion dollar future MK Stalin