மீண்டும் தள்ளிப்போகும் தவெகவின் மாநாடு தேதி - காரணம் என்ன?
tvk second conference date postpond
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்றக் கட்சியைத்
தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் கட்சியின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றுது. அன்றைய தினமே, கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் மாநாடு தொடர்பாக அனுமதி மனுவை அளித்தார். இதையடுத்து தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு தேதியை மாற்றுமாறு தவெகவிடம் காவல்துறை தெரிவித்ததையடுத்து 17-ந்தேதி மாநாடு நடத்திக்கொள்வதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், சுதந்திர தினத்தை காரணம் காட்டி 17-ந்தேதியும் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததுடன் வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல் 22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தவெகவின் மாநாட்டு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
tvk second conference date postpond