அதிமுக பொதுக்குழு வழக்கு: நீதிபதி தீர்ப்பால் உற்சாகத்தில் ஓ.பி.எஸ்.! பட்டாசு வெடித்து ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.!   - Seithipunal
Seithipunal


இன்று நடந்த அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் நீதிபதி ஜெயச்சந்திரன் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிமுக ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் எந்தவிதமான ஒப்புதலும் பெறாமல் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதே கோரிக்கையை முன்வைத்து பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, "உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று கூறி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் இதனை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு மீண்டும் கிருஷ்ணன் ராமசாமியின் விசாரணைக்கு வந்தபோது, வேறு ஒரு நீதிபதி இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார்.

இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடந்த விசாரணையின் முடிவில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இத்தகைய சூழலில், இன்று இந்த வழக்கு விசாரணை நடைந்த நிலையில், இருதரப்பு வாதங்களின் முடிவில் நீதிபதி ஜி.ஜெயசந்திரன், "அதிமுகவில் ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இருவரும் சேர்ந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழு கூட்டப்படுகிறது என்றால் 30 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். ஓ.பி.எஸ்ஸை கட்சியை விட்டு நீக்கியது செல்லாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமித்து முடிவுகளை எடுக்கலாம். " என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, இன்று நடந்த அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் நீதிபதி ஜெயச்சந்திரன் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops Happy with MHC Judgment


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->