டெல்லியின் அழைப்பு! உடனே கிளம்பிய ஓபிஎஸ்! வெளியாக போகும் டாப் சீக்ரெட்! பின்னணியில் யார்?
OPS consulting tomorrow evening about joining BJP alliance
முன்னாள் முதலமைச்சர் ஓ.ப்னனீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இன்று இரவு விமான மூலம் சென்னை வரும் அவர் நாளை மாலை 6:00 மணி அளவில் தனது ஆதரவாளர்களுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க பாஜக மேலிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாளை ஓபன் செல்வம் அணியினரின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் இந்த ஆலோசனை கூட்டமானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு முதல் முறையாக விளக்கம் அளித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாஜக கூட்டணிகளில் இருந்து வெளியேறியதாக தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் 2 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பாஜக தலைமையின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.
தேசிய தலைமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் வரும் அக்டோபர் 5ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஓபிஎஸ் அணியினர் நாளை அவசரமாக ஆலோசனை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
OPS consulting tomorrow evening about joining BJP alliance