தனித்துப் போட்டியிட தயார்! ஓபிஎஸ் தரப்பினர் அதிரடி அறிவிப்பு.!!
Ops announced Ready to compete alone in the elections
பாஜக உடனான கூட்டணி நிலைபாடு குறித்து இன்று தெரிவிப்பதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஓபிஎஸ் "பாஜகவின் மத்திய தலைமையில் இருந்து தினமும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். டெல்லி பாஜக தலைமையை சந்திப்பது இதன் பிறகு படிப்படியாக நடைபெறும். தற்போது நடைபெற இருப்பது நாடாளுமன்ற பொது தேர்தல் என்பதால் தேசிய அளவில் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்று தற்போது உள்ளது.
பாஜக இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் தகுதியையும் பாஜக பெற்றுள்ளது. எனவே பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு தான் நாங்கள் எங்களுடன் நிலைப்பாட்டை அறிவிப்போம்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் மோடியில் அருகே அமர வைத்த பாஜக தலைமைக்கு தொடர் நம்பிக்கை துரோகம் செய்து யார் என்பது உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டிற்கு நாங்கள் தான் தலைமை என கூறிய பிறகு தான் இந்த பிரச்சனை ஆரம்பமானது.
டெல்லி பாஜக தலைமை கூட்டணி விவகாரத்தில் தங்கள் நிலைப்பாடு தெரிவிக்கும் வரை நாங்கள் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் அவர்களின் நிலைப்பாடு குறித்து எங்கள் முடிவு இருக்கும். எதிர் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Ops announced Ready to compete alone in the elections