கோவையில் OPS -அண்ணாமலை சந்திப்பு! தேர்தல் முன் புதிய கூட்டணி சமிக்கையா...?
OPS Annamalai meeting Coimbatore Is sign new alliance before elections
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்ட நடவடிக்கைகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

அதே சமயம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு” என்ற அமைப்பை தொடங்கி பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்திருந்தார்.
ஆனால் கடந்த ஜூலையில் NDA-வில் இருந்து விலகிய OPS, தனது அடுத்தகட்ட அரசியல் முடிவை வரும் 15ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, OPS கடந்த சில நாட்களாக டெல்லியில் சென்று பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்த தொடர்ச்சியில், நேற்று கோவையில் நடைபெற்ற உரிமை மீட்புக்குழு நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் OPS, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சந்தித்தார்.
இருவரின் இந்த சந்திப்பு, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
English Summary
OPS Annamalai meeting Coimbatore Is sign new alliance before elections