எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கிறார்.

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூன் 12-ம் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது.

மேலும், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தின் காரணமாகவும் இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி வரும் ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition party discussion meeting MK Stalin participate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->